நெட்டிசன்
சந்திரபாரதி (Chandra Barathi) அவர்களின் முகநூல் பதிவு:
ணர்ச்சிகரமாக பேசி வருகிறார் பிரதமர்.
எடுத்த முடிவு சரி என்றால் உறுதியாக இருக்க வேண்டுமேயன்றி, தேச சேவைக்காக குடும்பத்தைத் துறந்தேன், கருப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியில் பாதிக்கப்பட்டவர்கள் தன்னைக் கொலைகூட செய்யலாம் எனப் புலம்புவதும் வேடிக்கையாக இருக்கிறது.
நாட்டில் எந்தக் குடிமகனும், அரசியல்கட்சியும், அரசியல்வாதியும் கருப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து கொண்டிருக்கவில்லை. பலமுறை/கடந்த 4 நாட்களில் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
0
நடைமுறைப்படுத்திய முறையிலும், நிர்வாக தயாரின்மையும் அதனால் விளைந்துள்ள சங்கடங்களைப் பற்றியும் மட்டுமே விமர்சனங்கள் எழுந்துள்ளன. தகவல் குறைபாடாக 10 மாதமாக திட்டமிட்டு தேவையான நோட்டுகளை அச்சிட்டதாகக் கூறியவர்கள், ரூபாய் நோட்டில் கையெழுத்திட்டிருக்கும் உர்ஜ்வத் பட்டேல் பணிக்கு அமர்ந்ததே செப்டம்பரில் தான் என மறந்து விட்டார்கள்.
இவர்களது துக்ளக் பாணி திட்டத்திற்கு ஆதரவளிக்காததால் ரகுராம் ராஜனை வெளியேற்றுவதிலேயே குறியாயிருந்தனர். விமர்சனங்களை தாங்காத, விமர்சிக்கவே கூடாது என்ற எண்ணம் கொண்டவர் 120 கோடி மக்களை எப்படி வழி நடத்த முடியும். விமர்சனங்கள் பொது மக்களிடமிருந்தும், துறை சார் வல்லுநர்கள், ஊடகங்களிடமிருந்து வரும் போது, மக்களுடன் இணைந்து ‘ உடன் இருக்கிறோம்’ என்பதை உணர்த்த வரிசையில் நின்ற தலைவரை ஊழல்காரர் வரிசையில் நிற்க வைத்தேன் என்று எக்காளமிடுவது தரக் குறைவான அரசியலன்றி வேறென்ன.
வரிசையில் நின்ற அந்த தலைவர் போராட்டம் எதுவும் நடத்தவில்லை, மக்களோடு ஒருவராக வரிசையில் தானே நின்றார். மோடி இன்னமும் வளர வேண்டும், எதில் அரசியல் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா கூட்டங்களிலும் தேர்தல் பிரசாரம் போலவே பேசக் கூடாது.
பயம் என்பது ஒழிக்கப்பட வேண்டிய உணர்வு, மோடி தொடர்ந்து பயந்து கொண்டே இருப்பதோடு, தன்னைத் தைர்யப்படுத்திக் கொள்ள வீரமாக பேசுகிறார்.
அவருக்கு மக்களைக் கண்டு பயம், தனது பொய்கள் வெளுத்துக் கொண்டிருக்கிறது என்ற பயம் தூக்கம் வராமல் நாடு நாடாய் துரத்துகிறது போலும்….
என்னமோ போடா மாதவா..  நாள் முழுதும் அலைந்தும் ஒரு ஏடி எம்மிலும் பணம் எடுக்க முடியவில்லை…இரவு சாப்பாட்டிற்கே ஓட்டலை தவிர்த்து நண்பர்கள் வீட்டுக்குத் தான் போகணும்…