முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

டில்லி:

டைபெற்று முடிந்த கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். இது அரசியல் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

நாட்டின் உயர்த்த பதவியான பிரதமர் பதவியில் இருக்கும் ஒருவர், இவ்வளவு தரக்குறைவாக பேசுவதா என சமூக வலைதளங்களிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை தேவையற்ற வார்த்தைகளையும்,  அச்சுறுத்தும் வகையிலும் தரக்குறைவாக பேசி வருகிறார். இது ஒரு பிரதமருக்கு அழகல்ல. அவரை கண்டியுங்கள் என்று  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் மன்மோகன் சிங்குடன், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த கர்நாடக தேர்தல் பிரசாரத்தின் போது, மோடி மிகவும் தரக்குறைவாக காங்கிரஸ் தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக முதல்வர், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினரிடம் 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு முதலமைச்சர் சித்தராமையா நோட்டீஸ் அனுப்பி யிருந்தது குறிப்பிடத்தக்கது.