டில்லி:

2014ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த அக்டோபர் வரை மோடி அரசு விளம்பர செலவு 3 ஆயிரத்து 755 கோடி என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அளித்து உள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலில், ‘‘மோடியின் அரசு மின்னணு மீடியா, அச்சு ஊடகங்கள், வெளிப்புற விளம்பரத்திற்கு ரூ. 37,54,06,23,616, செலவு செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வாருக்கு அளிக்கப்ப்டடுள்ள இந்த பதிலில், ‘‘மத்திய அரசு ரேடியோ, டிஜிட்டல் சினிமா, தூர்தர்ஷன், இன்டர்நெட், எஸ்எம்எஸ் மற்றும் டிவி போன்ற மின்னணு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கு ரூ. 1,656 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

அச்சு ஊடகங்களில் வெளியான விளம்பரங்களுக்கு ரூ. 1,698 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. பேனர்கள், போஸ்டர்கள், காலண்டர்கள் போன்ற பிற வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ. 399 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொகையானது சில முக்கிய அமைச்சகம் மற்றும் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கும் தொகையைவிட அதிகமாக உள்ளது. மாசு கட்டுப்பாட்டிற்கு அரசு ஒதுக்கும் தொகை மூன்று வருடங்களாக ரூ. 56.8 கோடியாகும். பிரதமர் மோடி மாதம் தோறும் வானொலியில் உரையாற்றுவதற்கு 2015ம் ஆண்டு ஜூலை வரை விளம்பரம் செலவு ரூ. 8.5 கோடியாகும்.