டில்லி,

பிரதமராக மோடி பதவியேற்றபிறகு ராணுவ வீரர்களின் தற்கொலை அதிகரித்து வருவதாக பாதுகாப்புத்துறை தெரிவித்து உள்ளது.

மோடி தலைமையிலான பாரதியஜனதா அரசு  ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 310 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக பகீர் தகவலை தெரிவித்துள்ளது  பாதுகாப்பு துறை.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் 310 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

2014 ம் ஆண்டில் 84 ராணுவ வீரர்களும், 2015-ஆம் ஆண்டில் 78 பேரும்,   2016 ஆம் ஆண்டில், 104 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாகவும், 2017 ஆம் ஆண்டில் ஜூலை வரை 44 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாட்டுக்காக போராடும் ராணுவ வீரர்களின் தேவைகளை மத்திய அரசு சரிவர  செய்து கொடுக்காததால் ஏற்படும் மன அழுத்தத்தினாலேயே பலர் தற்கொலைக்கு தள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

ஆனால், பிரதமரோ மான்கிபாத் நிகழ்ச்சியில் பேசும்போது…  நமது ராணுவ வீரர்கள், நாட்டின் பாதுகாப்புக்காக அவர்கள் பல்வேறு தியாகங்களை செய்துவருகிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வும், உழைப்பும் என்னை திக்குமுக்காட செய்கிறது. அவர்களின் தியாகம், எனது மனதையும், இதயத்தையும் தொட்டுவிட்டது.
 
சில ராணுவ வீரர்கள், பாலை வனத்தில் பணியில் இருக்கிறார்கள். சிலர், இமயமலையில் காவல்காக்கிறார்கள். சிலர் தொழிற்சாலைகளிலும், சிலர் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

நாட்டின் பாதுகாப்புக்காக அவர்கள் எண்ணற்ற துயரங்களை தாங்கிவருகிறார்கள். அவர்களை நாம் அவர்களை நினைவு கூர்ந்தால், அவர்களுக்கு வலிமையும், புத்துணர்வும் கிடைக்கும்

என்று வீர வசனம் பேசி வரும்  மோடியின் ஆட்சியில்தான்,  ராணுவ வீரர்களுக்கு தரப்படும் உணவு சரியில்லை என்று கூறிய  தேஜ்பகதூரை பந்தாடியதும், மத்திய அரசின் ”ஒரு தகுதி ஒரு ஓய்வூதியம்” (OROP) திட்டத்தால் அதிருப்தி அடைந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் நடைபெற்றுள்ள நிலையில்,

கடந்த 3 வருடங்களில் 310 ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக பாதுகாப்பு துறையே அறிவித்துள்ளது, பொதுமக்களை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.