சென்னை:

மோடி ஜிஜின்பிங் வருகை இன்று வர உள்ளதையொட்டி, இன்று முதல்  ஓஎம்ஆர், ஈசிஆர் மற்றும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக்குக்கு 2 நாள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

சீன அதிபரும் பிரதமர் மோடியும் இன்று மதியம் சென்னை வருகின்றனர். இதன் காரணமாக  சென்னை முதல் மாமல்லபுரம் வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஜின்பிங்கை வரவேற்க சென்னை முதல் மாமல்லபுரம் வரை 35 இடங்களில் கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், சென்னை ஓஎம்ஆர், ஈசிஆர் உள்பட மாம்மல்லபுரம் வரையிலான பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை இரண்டு மூட அரசு உத்தரிவிட்டு உள்ளது. இந்த பகுதியில் உள்ள 19 டாஸ்மாக் கடைகள் மூப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிகாரர்கள் திண்டாடி வருகிறார்கள்..