மாமல்லபுரம்:

மிழகம் வந்துள்ள சீன அதிபர் ஜிஜின்பிங்கை, பிரதமர் மோடி, தமிழரின் பாரம்பரிய வேட்டி சட்டையுடன் மாமல்லபுரத்தில்  வரவேற்றார். அதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் மாமல்லபுரம் சிற்பங்களை கண்டு ரசித்தனர்.

முன்னதாக சென்னையில் இருந்து மாலை 4 மணி அளவில் மாமல்லபுரம் புறப்பட்ட சீன அதிபருக்கு வழி நெடுகிலும், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக சாலையோரம் நின்ற வரவேற்பு அளித்தனர்.

மாமல்லபுரம் சென்ற சீன அதிபரை பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து வரவேற்றார்.  சுமார் 1 மணி நேரம் மாமல்லபுரம் சிற்பங்களை இரு தலைவர்களும் பார்த்து ரசித்தனர் தலைவர்கள்.

பின்னர் ஐந்து ரதம் பகுதியில் அமர்ந்து தலைவர்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். அப்போது மோடி, மாமல்லபுரத்தின் சிறப்பு குறித்து ஜின்பிங்கிடம் எடுத்துரைத்தார்.  உரையாடலின் போது சீன அதிபருக்கு இளநீர் கொடுத்து உபசரிக்கப்பட்டது. சீன அதிபரும் – மோடியும் இளநீர் அருந்தியபடியே உரையாடினர்.

தொடர்ந்து பல்வேறு சிற்பங்களை கண்டுகளித்தனர். இறுதியாக ஐந்து ரதம் சந்திப்பை நிறைவு செய்துவிட்டு கடற்கரை கோவிலுக்கு புறப்பட்டனர்.

கடற்கரை கோவிலில் ஜின்பிங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ஜின்பிங்கை வரவேற்றார்.

கடற்கரை கோவிலின் பெருமைகளை விவரிக்கிறார் சீன அதிபருக்கு மோடி விவரித்தார். கடற்கரை கோவில், வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலித்தது. அதைத் தொடர்ந்து,. இந்திய – சீன அதிகாரிகள் தலைவர்களுக்கு பரஸ்பரம் அறிமுகம் செய்யப்படுகின்றனர்.

இதையடுத்து கலாஷேத்ரா குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. சுமார் 45 நிமிடங்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்கிறார்.

இதில் தமிழக கவர்னர், முதல்வர் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.