காவல்கிணறு:

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் பிரதமர் மோடி என்று மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ  கூறி உள்ளார்.

மோடியின் கன்னியாகுமரி வருகைக்கு எதிர்த்து கருப்புக்கொடி போராட்டம் மற்றும் கருப்பு பலூன்களை பறக்க விட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கன்னியாகுமரி எல்லையான காவல்கிணறு பகுதியில் வேனில் நின்றபடி ஆவேசமாக பேசினார்.

அப்போது,  அதானி, அம்பானி கம்பெனிகள் கொள்ளையடிக்க வழிவகுத்தவர்தான் மோடி என்றும், காவிரி அணையின் குறுக்கே மேகதாது அணையை கட்ட  மத்திய அரசு திட்ட ஆய்வுக்கு அனுமதி கொடுத்து விட்டது என்று மோடி மீது குற்றம் சாட்டினார்.

அதுபோல  முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட திட்ட ஆய்வுக்கு அனுமதி கொடுத்து விட்டனர்.. இது நடந்தால் பென்னி குக் கட்டிய அணை இடிக்கப்பட்டுவிடும் என்றார்.

தமிழகத்தில்  தந்தை பெரியார் , கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி போராடிப் பெற்ற அனைத்தையும் அழிக்கப் போகிறார்கள் என்றும்,  இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து இந்துத்துவாவை பரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு வைகோ பேசினார்.