கன்னியாகுமரி:

மிரட்டுவதில் பிரதமர் மோடி வல்லவர் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வரும் 13ந்தேதி கன்னியாகுமரி வருகை தருகிறார். அன்றைய தினம் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் பிரமாண்ட  பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்ட கே.எஸ்.அழகிரி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக பாஜக கூட்டணி குறித்து விமர்சித்தவர்,  பாஜக கட்சி இடஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சி என்று குற்றம் சாட்டினார்.

மேலும், கஜா புயல் காரணமாக தமிழக அரசு, மத்திய அரசிடம்  நிவாரணமாக ரூ.1 லட்சம் கோடி கேட்டது. ஆனால், மத்திய அரசாங்கம் வெறும் ரூ. 3ஆயிரம் கோடிதான் கொடுத்துள்ளது. ஆனால், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளவர்கள், மோடியுடன் பேசும் மேடையில் உள்ளனர். ஆனால், அதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. அதே மேடையில்,  ராமதாஸ், எடப்பாடி இருந்தனர், அவர்கள் மோடியிடம்  இதுகுறித்த கேட்க வேண்டாமா? மாநிலத்தின் நலன்கருதி அவர்கள் பேச வேண்டாமா?, குறைந்த பட்சம் அவர்கள் கோரிக்கையாவது வைத்திருக்க வேண்டும் என்று கூறியவர்,  மோடியை பார்த்து அவர்கள் அச்சப்படுகிறார்கள்… அஞ்சுகிறார் கள்/அவர்களை மோடி மிரட்டி வைத்துள்ளார்… அந்த வகையில்,  கூட்டணி கட்சிகளை மிரட்டுவதில் மோடி பலசாலி என்றார்.

கே.எஸ்.அழகிரி செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.ஆர்.ராமசாமி உடனிருந்தனர்.