மிர்சாப்பூர்

பிரதமர் மோடி மக்களை முட்டாள்கள் என எண்ணுவதை நிறுத்த வேண்டும் என காங்கிர்ஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி உத்திரப் பிரதேச மாநில கிழக்குப் பகுதியின் பொறுப்பையும் கவனித்து வருகிறார். தற்போது அவர் கங்கா யாத்திரா என்னும் படகு சுற்றூப்பயனத்தை நடத்தி வருகிறார். பிரயாக்ராஜ் நகரில் இருந்து காசி வரை பயணம் செய்யும் பிரியங்கா கங்கை நதிக்கரையில் உள்ள பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அவர் தனது பயணத்தின் இடையில் மிர்சாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரியங்கா, “கடந்த நான்கு வருடங்களாக பிரதமர் மோடி நாட்டில் உள்ள அனைத்து அமைப்புக்களையும் தனது உரையில் தாக்கி வருகிறார். அவர் உங்களையும் விட்டு வைக்கவில்லை. மக்களை முட்டாள்கள் என நினைப்பதை பிரதமர் நிறுத்த வேண்டும். மக்கள் தற்போது அனைத்தையும் புரிந்துக் கொள்கின்றனர்.

நமக்கு எது நடந்தாலும், நாம் துன்புறுத்தப் பட்டாலும் அதற்காக பயப்படக் கூடாது. நமக்கு எதிராக உள்ளவர்களுடன் தொடர்ந்து போரிட வேண்டும். நாம் எந்த அளவுக்கு துன்புறுத்தப் படுகிறோமோ அந்த அளவுக்கு பலம் பொருந்தியவர்களாக மாறுவோம். ஆகவே தொடர்ந்து போரிடுவது அவசியமாகும்

நாட்டு மக்களுக்கு மோடி அரசு எவ்வித நன்மையும் செய்யாமல் உள்ளது. அழும் குழந்தைகளுக்கு குச்சி மிட்டாய் அளிப்பதை போல அரசு மக்களிடம் நடந்துக்கொள்கிறது. அரசியல் என்பது நாட்டு முன்னேற்றத்துக்காக நடத்தப்பட வேண்டும். அதனால் தான் காங்கிரஸ் அரசு 100 நாட்கள் வேலை திட்டம் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு அளித்தது.

பாஜக அரசு வேலை வாய்ப்பு அளிக்காமல் அனைத்தையும் இயந்திர மயமாக்கி உள்ளது. அதனால் ஏற்கனவே உள்ள வேலைவாய்ப்பும் குறைந்து வருகிறது. காங்கிரச் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் மற்றும் ஏழைகள் முன்னேற்றத்துக்கனா நடவடிக்கைகளை எடுக்கும்” என தெரிவித்த்ள்ள்ளர்.