டில்லி

பிரதமர் மோடி இஸ்ரேல் மீஎதான தாக்குதல் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இன்று காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள், ‘ஆபரேஷன் அல் அக்சா ஃபிளட்’ என்ற பெயரில் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தின. காசா முனையில் இருந்து 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்டுகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இஸ்ரேலின் பல்வேறு நகரங்களுக்குள் நுழைந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து, பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த வகையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

 “எனக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது.  தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காகப் பிரார்த்தனை செய்வோம். கடினமான சூழலை எதிர்கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்போம்.” 

என்று தெரிவித்துள்ளார்.