லண்டன்:

லகின் மிக சக்திவாய்ந்த நபர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்று இங்கிலாந்து பத்திரிகை தகவல் வெளியிட்டு உள்ளது.

இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளியாகும் முன்னணி இதழான பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகை  நடத்திய உலகின் மிக சக்திவாய்ந்த நபர் 2019 க்கான வாசகர்களின் கருத்துக்கணிப்பில், மோடி அதிக வாக்குகள் பெற்று உலகின் சக்தி வாய்ந்த பிரதமராக தேர்வாகி உள்ளார்.

அந்த பத்திரிகை நடத்திய உலக அளவிலான வாக்கெடுப்பில் முதல்கட்டமாக  25-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பரிந்துரைக்கப்பட்டனர், இறுதியாக நான்கு பேர் மட்டுமே ஒரு நிபுணர் குழுவால் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.  பரிந்துரைக்கப்பட்ட அனைவரின் விரிவான ஆய்வு மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில்  பின்னர் கருத்துக்கணிப்பு நடைபெற்றது.

வாக்கெடுப்பில் கலந்துகொண்டவர்கள், வாக்குகளை சரிபார்க்க கட்டாய கடவுச்சொல் (OTP) செயல்முறை மூலம் சரிபார்த்தே வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த போட்டியில் இந்திய பிரதமர் மோடி, ரஷ்யாவின் விளாடிமிர் புடின், அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீனாவின் ஜி ஜின்பிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதில், 30.9% வாக்குகளைப் பெற்று இந்திய பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ரஷ்ய அதிபர்  விளாடிமிர் புடின் 29.9% வாக்குகளும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 21.9% வாக்குகளும், சீனா அதிபர்  ஜி ஜின்பிங்18.1% வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதையடுத்து, இந்திய பிரதமர் மோடி பல உலகத் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் தோற்கடித்து உலகின் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் ஹெரால்டு பத்திரிகை அறிவித்து உள்ளது.