புதுடெல்லி: நாட்டின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருக்கும் ஒரு சூழலில், மோடி அரசின் 6 ஆண்டு ஆட்சியின் சாதனைகள் குறித்த ஒரு காணொளிக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற வாகனம் உத்திரப்பிரதேசத்தில் விபத்தில் சிக்கி, 24 பேர் பரிதாபமாக இறந்த ஒரு சூழலில், இந்த காணொலிக் காட்சியை வெளியிட்டுள்ளது அந்தக் காட்சி.
இந்தக் காணொலிக் காட்சியில், பலன்தராத ஸ்வாச் பாரத் மற்றும் மேக் இன் இந்தியா போன்ற பழைய திட்டங்கள் தொடர்பான அம்சங்கள்தான் இடம்பெற்றுள்ளனவே தவிர, கொரோனா பரவல் நெருக்கடியை மோடி அரசு வெற்றிகரமாக கையாண்டது தொடர்பான எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திரப்பிரதேசத்தில் நிகழ்ந்த கோர விபத்து தொடர்பாக மோடி உள்ளிட்ட பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்கள் சம்பிரதாய இரங்கல் தெரிவித்திருந்தனர். மொத்தம் 9 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ கிளிப், அந்தக் கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
அதில், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில், மோடி வெற்றிபெற்றபோது, அவர் கூட்டத்தைப் பார்த்து கையசைக்கும் ஒரு படம் இதில் இடம்பெற்றுள்ளது.