புதுடெல்லி: மக்கள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்தபோது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்த நரேந்திர மோடி அரசாங்கம் நம்பத்தக்க ஒன்றல்ல என்றுள்ளனர் டெல்லியில் போராடும் மூத்த விவசாயிகள்.

இதே வேறு அரசாக இருந்திருந்தால், இந்த சட்டம் 18 மாதங்கள் நிறுத்திவைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஏற்று நாங்கள் போராட்டத்தைக் கைவிட்டிருப்போம் என்றுள்ளனர் அவர்கள்.

கடந்த ஜூன் மாதம், நாடே முழு அடைப்பில் இருந்தபோது, இந்த வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பின்னர், கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றம் கூடியபோது, இந்த சட்டம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

எனவே, விவசாயிகள் மனஉறுதியுடன் போராடி வருகின்றனர். தாங்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என்றும், தேவைப்பட்டால் வரும் 2024ம் ஆண்டுவரை போராட்டத்தை தொடர்வோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த சட்டத்தை திரும்பப்பெறும் வரையிலும் தங்களின் போராட்டம் தொடரும் என்றும் வஅவர்கள் அறிவித்துள்ளனர்.

தாங்கள் இப்போது பின்வாங்கிவிட்டால், அது அரசிற்கான வெற்றியாகப் போய்விடும் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.