மாட்டிறைச்சி படுகொலைகள் குறித்த ஆவணப்படம் – தடைசெய்ய மோடி அரசு முயற்சி?

Must read

புதுடெல்லி: ‘Lynch Nation’ என்ற பெயருடைய ஒரு டாகுமென்டரி படத்தை தடைசெய்யும் வழியைத் தேடிக்கொண்டிருக்கும் மோடி அரசு, அப்படத்தின் ட்ரெய்லரை நீக்குமாறு யூடியூப் நிறுவனத்தைக் கேட்டுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 42 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டாகுமென்டரி படம், மோடியின் கடந்த ஆட்சியில் முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தானது என்று கூறப்படுகிறது.

கடந்தாண்டு செப்டம்பரில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அதன்பிறகு 3 மாதங்கள் கழித்து, அந்த டாகுமென்டரி படம், அமெரிக்காவின் வீடியோ பகிர்வு தளமான விமியோவில்(Vimeo) பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதேசமயம், இந்தக் கோப்பானது கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படுவதால், ஒருவர் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமானால், படத் தயாரிப்பாளர்களிடமிருந்து இணைப்பை(link) பெற வேண்டும்.

தற்போதுவரை, நாட்டின் பல பகுதிகளில் இந்த டாகுமென்டரி படம் திரையிடப்பட்டுள்ளது. படத்தயாரிப்பாளர்கள் தரப்பில் இவை அனைத்தும் தனிப்பட்ட நபர்களின் விருப்பக் காட்சிகள் என விளக்கம் சொல்லப்பட்டாலும், இதை ஒரு பொது நிகழ்வாகவே அரசு தரப்பு கருதுகிறது என்று கூறப்படுகிறது.

More articles

Latest article