டெல்லி: விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது; ஊடகங்கள்தான் இதுகுறித்து பிரச்சினை எழுப்ப வேண்டும் என்று லகிம்பூர் கேரி வன்முறை குறித்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

உத்தரபிரதேச மாநிலத்தில், லகிம்பூர் கேரி பகுதியில் கடந்த 10-ந் தேதி அரசு விழா ஒன்றுக்கு, துணை முதல்-மந்திரி கேசவ் மவுரியா, மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி அஜய் மிஸ்ரா ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அங்கு விவசாயிகள் அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்திய  விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் காரைக்கொண்டு மோதியதில் 2 பேர் இறந்தனர்.  அதைத் தொடர்ந்து வன்முறை மூண்டது. இதில் 4 விவசாயிகள் 4 பாஜகவினர், பத்திரிகையாளர் ஒருவர் என மொத்தம் 9 பேர் பலியாகினர். விவசாயிகள் மீது காரை மோதிய வர், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா என கூறப்படுகிறது. வன்முறையைத் தொடர்ந்து. லகிம்பூர் கே பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  வன்முறையில் பலியானவர்களின் குடும்பத்தினரை  நேரில் சந்தித்து ஆறுதல் கூறச்சென்ற பிரியங்கா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, விருந்தினர் இல்லத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்மீது அமைதிக்கு குத்தகம் விளைவிப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரியங்கா காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்துதமிழகம் உள்பட நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் 5 பேர்குழுவினர் இன்று  லகிம்பூர் மாவட்டம் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதைய றிந்த உ.பி. அரசு, லக்னோவிலும் 144 தடை உத்தரவை நேற்று இரவு பிறப்பித்தது. மேலும் வெளியாட்கள் வரவும் தடை விதித்துள்ளது. இதனால் ராகுல்காந்தி உ.பி. செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று காலை ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

விவசாயிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. , விவசாயிகளை அவமதிப்பது மட்டுமன்றி அவர்களை கொலை செய்து வருகிறது  என்று குற்றம் சாட்டியவர்.

நேற்று உ.பி. மாநிலம் லக்னோ சென்ற  பிரதமர் மோடி லகிம்பூர் கேரி சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்கவில்லை. அகங்காரத்தின் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

நான் லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளேன் என்று கூறியவர், இன்று, இரண்டு முதல்வர்களுடன் நாங்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கெரிக்கு சென்று அங்குள்ள நிலைமையை புரிந்துகொண்டு விவசாயிகளின் குடும்பங்களை ஆதரிப்போம் என்றார்.

விவசாயிகள் சொல்லப்பட்ட வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. மேலும் ஜீப்பால் மோதி விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது/

மேலும்,  பிரியங்கா சீதாபூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் இது விவசாயிகள் தொடர்பான விஷயம் என்று கூறியதுடன்,

லகிம்பூர் கேரி வன்முறை குறித்த பிரச்சனை  எழுப்புவது உங்கள் (ஊடக) பொறுப்பு, ஆனால் நாங்கள் கேள்விகள் கேட்கும்போது, நீங்கள் (ஊடகங்கள்) நாங்கள் அரசியல் செய்கிறோம் என்று சொல்கிறீர்கள். அதனால், இதுகுறித்து நீங்களே பிரச்சினையை எழும்புங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.