டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளனதுடன் 278 உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் தொற்றில் இருந்து 24,770 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக மேலும் 18,833 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,71,881ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மேலும் 278 பேர் கொரோனாவால் பலியான நிலையில், இதுவரை  உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,49,538 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக உள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் மேலும்,   24,770 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம்  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,31,75,656 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.94% ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும்  2,46,687 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.73% ஆக குறைந்துள்ளது. இது 203 நாட்களுக்கு பிறகான குறைந்த பதிவு என்று கூறியுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 59,48,360 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது./ இதுவரை 92,17,65,405 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.