மோடியின் அறிவிப்பால் ரிலீசாகுமா இந்த வார திரைப்படங்கள்.?

Must read

kadavul-irukaan-kumaru-movie-aym-news
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவதாக நேற்று இரவு அறிவித்த பின்னர் இந்தியாவே கதிகலங்கியுள்ளது. இந்த அறிவிப்பை சிலர் வரவேற்றாலும் பலர் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் திரைக்கு வரயிருக்கும் “அச்சம் என்பது மடமையடா” “கடவுள் இருக்கான் குமாரு” “மீன் குழம்பும் மண்பானையும்” ஆகிய படங்கள் ரிலீசாகவுள்ளது. மோடியின் அறிவிப்பால் திரைக்கு வரும் பார்வையாளர்கள் கொண்டு வருவது 500 1000 ரூபாய் நோட்டுகள்தான், தற்போது அந்த நோட்டுகள் செல்லாது என்பதனால் மக்கள் யாரும் படத்தை பார்க்க வரமாட்டார்கள் என தயாரிப்பாளர்களும் திரையரங்க உரிமையாளர்களும் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் இந்த வாரம் படங்கள் ரீலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, என்ன நடக்கிறது என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்…

More articles

Latest article