2024 நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு அடுத்தவாரம் நடைபெறுகிறது.

2014 முதல் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் கனவில் உள்ளது.

பிரதமர் மோடி நாடு முழுவதும் பறந்து பறந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் ராம நவமியை ஒட்டி மேற்கொள்ளப்படும் சைத்ர நவராத்திரியின் போது கூட சிலர் அசைவ உணவை சாப்பிடுகிறார்கள் என்று குறைகூறினார்.

அசைவ உணவு சாப்பிடுவது குறித்த மோடியின் இந்த பேச்சு நாடு முழுவதும் உணவு அரசியலை திணிக்கும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-வின் கொள்கையை பறைசாற்றுவதாக உள்ளது என்று சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.