மோடி 2 ஆண்டு சாதனை: மின்துறையில் 50 ஆயிரம் கோடி ஊழல்: பகுதி 2

Must read

ப்படி போலியாக விலையேற்றி நிலக்கரி வாங்கி நடக்கும் மோசடி ஒருபுறம். இன்னொரு புறம், தரம் குறைந்த நிலக்கரியை தரமான நிலக்கரி என்று போலியாக சான்றிதழ் தயாரித்து இறக்குமதி செய்து அதன் மூலமும் பல கோடிகள் கொள்ளயடிக்கப்பட்டதும் நடந்திருக்கிறது.
இது எப்படி என்று பார்ப்போம்…
நிலக்கரியின் தரம் அதன் மொத்த கலோரிபிக் மதிப்பை(Gross Calorific Value- CGV) பொருத்து தீர்மானிக்கப்படுகிறது.
இதை வைத்தே அதன் விலையும் அதிகரிக்கும். இந்த நிறுவனங்கள் குறைந்தவிலைக்கு தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்துவிட்டு அதிக தரமுள்ள நிலக்கரியை வாங்கியதாக கூறி போலி ஆவணங்களை அளிக்கின்றன.
இதனால் மக்களின் பணம் கொள்ளைபடிக்கப்படுவதோடு மின்சார உற்பத்தியும் குறைந்து நாட்டுக்கு இரட்டை இழப்பு ஏற்படுகிறது.
உபகரணங்கள் இறக்குமதியில்  நடக்கும் மோசடியும் இப்படித்தான். அதாவது, தங்கள் துணை நிறுவனங்களின் வழியாக விலையை
மிகைப்படுத்தி கூறி பெரும் மோசடி நடந்திருக்கிறது.
அதானி, எஸ்ஸார் உள்ளிட்ட நிறுவனங்கள். சீனாவிலிருந்ததும், தென் கொரியாவிலிருந்தும் இந்தியாவிற்கு நேரடியாக இறக்குமதி செய்திருக்கின்றன. ஆனால்,  இடையில் பல நிறுவனங்களை நுழைத்து, விலையை அதிகப்படுத்தி திட்டமிட்ட முறையில் இந்த கொள்ளை நடந்திருக்கிறது.
இம்முறையில் அதானி குழுமம் மட்டுமே சுமார் 6000கோடிகள் மோசடி செய்திருப்பதாக மத்திய வருவாய்துறை நுண்ணறிவு இயக்குநகரகம் அந்நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதே போல எஸ்ஸார் நிறுவனம் சுமார் 3000 கோடி அளவில் மோசடி செய்துள்ளதும் தற்போது அம்பலமாகி இருக்கிறது.
images (1)
அதானி குழுமத்திற்கு வருவாய் நுண்ணறிவு இயக்குனரகம் அனுப்பியிருக்கும் சம்மனில் மேற்படி ஊழலை  சுட்டிகாட்டி “அந்நிய செலவாணியை திட்டமிட்ட முறையில் வெளிநாட்டிற்கு எடுத்து செல்ல சதிதிட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
கவுதம் அதானியின் சகோதரர் விநோத் அதானியை குறிப்பிட்டு  இது தொடர்பான விசாரணையில்  நேரில் ஆஜராகுமாறு பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர்  வேண்டுமென்றே ஆஜராக மறுத்து விசாணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். ஆனால் இந்த சம்மன் அனுப்பபட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் கூட அதானி மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மோடி பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது என்பதையும் இதனுடன் இணைத்து பார்க்க வேண்டியது அவசியம்.
இழப்பீட்டு கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளையை பார்ப்போம்.
குஜராத் மாநிலம் முந்திரா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் அதானி மற்றும் டாடா-வின் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாக குஜராத், மஹாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா முதலிய  மாநிலங்களுக்கு மின்சார  விநியோகம் நடக்கிறது. இதற்கான மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை(Power Purchase Agreemnt -PPA). சம்பந்தபட்ட மின்பகிர்மான நிலையங்களோடு டாடாவும், அதானியும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தப்படி மின் உற்பத்திக்கான எரிபொருளை உத்திரவாதப்படுத்தி தடையின்றி மின்சார விநியோகம் செய்வது டாடா மற்றும் அதானி நிறுவனங்களின் பொறுப்பாகும். இதற்காக அந்த நிறுவனங்கள் நிலக்கரி சுரங்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இதன்படி அதானி பவர் நிறுவனம் இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கம் கொண்டிருக்கும் தனது மற்றொரு அதானி என்டர்பிரைஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்கிறது. டாடா பவர் நிறுவனம் தான் 30% பங்கு வைத்திருக்கும் இந்தோகோல் நிறுவனத்துடன் ஒப்பந்த செய்துகொள்கிறது.
இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு டாடா மற்றும் அதானி நிறுவனங்கள் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றும் அதற்கு இழப்பீட்டு கட்டணம் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தன. நஷ்டத்திற்கு காரணமாக அவர்கள் கூறியது தாங்கள் குறைந்த விலைக்கு நிலக்கரி பெற இந்தோனேசிய நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டிருந்ததாகவும் ஆனால் 2010-ம் ஆண்டு இந்தோனேசிய அரசு சந்தைவிலைக்கு தான் விற்க வேண்டும் என்று உத்தவிட்டிருப்பதாகவும் அதனால் இந்தோனேசிய நிலக்கரியின் விலை உயர்ந்து தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் கூறி இழப்பீட்டு கட்டணம் கோரியன. .
இதை விசாரித்த மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம்  “மின்சார சட்டம் 2013பிரிவு 79(1)ன் படி நுகர்வோரின் நலனை மட்டும் கணக்கில் கொள்ள கூடாது மின்சார முதலாளிகளின் நலனையும் கணக்கில் கொள்ள வேண்டும்” என்று அச்சட்டம் கூறுகிறது. அச்சட்டப்படி இழப்பீடு தொகை வழங்கலாம் என்று தீர்ப்பு கூறியது.
இந்த இழப்பீட்டுத்தொகையை கணக்கிட எச்.டி.எப்.சி சேர்மேன் பரேக் மற்றும், தற்போதைய எஸ்.பி.ஐ (State Bank of India) தலைவர் அப்போதைய எஸ்.பி.ஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ் லிமிட்டடின்(SBI markets Limited) தலைமை செயல் அதிகாரியான அருந்ததி பட்டாச்சார்யா உள்ளிட்டவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.  இக்குழு டாடா மற்றும் அதானிக்கு 10,000 கோடி இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தது.
இது தொடர்பான மேல்முறையீடு தீர்பாயத்தில் நடந்துவந்தது. இதன் தீர்ப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இதில் மின்சார சட்டப்பிரிவு 79(1) -ன் படி மேற்படி இழப்பீடுத்தொகை வழங்கியது தவறு  என்றுகூறப்பட்டது.
ஆக நிலக்கரி இறக்குமதியில் போலி விலையேற்றத்தின் மூலம் சுமார் 30,000 கோடி, மின்னுற்பத்தி நிலைய உபகரணங்கள் இறக்குமதியின் போலி விலையேற்றம் என்கிற வகையில் சுமார் 9,000 கோடி, இழப்பீட்டு கட்டணம் என்கிற வகையில் சுமார் 10,000 கோடி என்று கிட்டத்தட்ட 50,000 கோடி அளவில் கொள்ளை நடந்துள்ளது.  இதைக்கூட  குறைந்தபட்ச கணக்கீடு என்கிறது எக்கனாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி.
மின்சார விலையேற்றத்தின் மூலம் இக்கொள்ளை பணம் பொதுமக்களிடமிருந்து பிடுங்கபடுகிறது.. ஒவ்வொரு யூனிட்டுக்கும் ரூ 1.50 முதல் ரூ 2.00 வரை நாம் அதிகமாக செலுத்துகிறோம். மாதம் 1000 யூனிட் பயன்படுத்தும் ஒரு வீட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 24,000 ஆயிரம் வரை கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.
நாமோ, முதல் 100 யூனிட் இலவசம் எனறால் எவ்வளவு மிச்சமாகும் என்று கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறோம்.
ஹூம்..!
( நிறைவு)
 
முதல் பகுதி:  https://patrikai.com/modis-2-year-record-electrical-field-50-thousand-crore-scam-part-1/

More articles

Latest article