டெல்லி:  உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலான தடுப்பூசிகள் செயல்பாட்டு வந்துள்ள நிலையில், 2022ம் ஆண்டில் இந்தியாவில் ஒற்றை டோஸ் தடுப்பூசி நடைமுறைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரேனா பரவலை தடுக்க த்டுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் 2 டோஸ்களாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் அமெரிக்காவைச் சேர்ந்த மாடர்னா மருந்து நிறுவனம் ஒன்றை டோஸ் கொண்ட தடுப்பூசியை தயாரித்து உள்ளது. இதை சில நாடுகள் செலுத்தி வருகின்றன.

இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் நடைமுறையில், உள்ளன. இந்தியாவின் சில பகுதிகளில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. எனினும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருப்பதால் மேலும் வெளிநாட்டு தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனமான, மாடர்னா அடுத்த ஆண்டுஇந்தியாவில் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்கட்டமாக அந்நிறுவனம் தற்போது 5 கோடி டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்காக சிப்லா மற்றும் மற்றொரு மருந்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின்  மாடர்னா தடுப்புசி 12 வயது முதல் 17 வயது வரையில் உள்ளவர்களுக்கு மாடர்னா தடுப்பூசியின் இருசெலத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட சோதனையில்  100% பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 2வது மற்றும் 3வது கட்ட சோதனைகள் செய்யப்பட உள்ளன.

அதன்பிறகு, 2022 ஜூன் மாதத்தில் அமெரிக்க ஒழுங்குமுறை அமைப்பான எஃப்.டி.ஏ  தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்படும் என்றும், அதன்பிறகே, அவை இந்தியா உள்பட வெளிநாடுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.