மனித உடலுக்கு உள்ளே வரும் வைரஸ், மனிதனின் மரபணுக்கள் மற்றும் சேய் செல்களை உருவாக்கும் புரோட்டீன்களை வசப்படுத்தி தன்னுடைய சேய் வைரஸ்களை உருவாக்குகிறது. இந்த சேய் வைரஸ்களை  உருவாக்கும் செயல்பாடானது, தொற்று ஏற்பட்டு, மனிதன் இறக்கும் வரை, ஒரு முடிவே இல்லாமல் நடைபெறும் செயலாகும். ரெம்டெசிவிர் மருந்து இந்த நகலெடுக்கும் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ரெமெடிசிவர் வழங்கப்பட்டுள்ளது என்றும் தற்போது ஜனாதிபதி ஓய்வில் உள்ளார் என்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ரெமெடிசிவரின் செயல்திறன் குறித்து உலகளாவிய அளவில் விவாதம் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் SARS-CoV-2 க்கு எதிராக இந்த மருந்து எவ்வாறு செயல்படுகிறது?
வைரஸ் மனித செல்களுக்குள் நுழைந்ததும், அதன் செல் சவ்வின் மீது துளையிட்டு தனது மரபணுவை மட்டும் உள்ளே அனுப்பும். உள்நுழைந்த அதன் மரபணு மனிதர்களின் மரபணுவுடன் இணைந்து, மனிதர்களின் நகலெடுக்கும் நுட்பத்தையும், புரோட்டீன்களையும் பயன்படுத்தி புதிய சேய் வைரஸ்களை உருவாக்கும். இந்த செயலுக்காக மனித செல்லின் மரபணுவை தனது வசபடுத்திக் கொள்ளும். ரெம்டேசிவிர் மருந்து, இந்த நகலெடுக்கும் செயல்பாட்டில் ஈடுபடும் ஒரு முக்கிய புரோட்டீனின் செயல்பாடுகளைத் தடுக்கும் திறனுடையது என்றும், இதனால் வைரஸ்கள் புதிதாக உருவாவது தடுக்கப்பட்டு நோயாளி விரைவில் குணமடைவார் என்றும்  ஆல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
https://www.youtube.com/watch?v=GZucJzAmYhM
Thank you: COVIDIndia.org
ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஆப் பயோபிசிகல் கெமிஸ்ட்ரி ஆராய்ச்சியாளர்கள் வைரசின் சேய் செல்களை உருவாக்கும் புரோட்டீன் கட்டமைப்பை 3D யில் உருவாக்கியுள்ளனர். இந்த புரோட்டீன் கட்டமைப்பில் உள்ள ஒரு முக்கிய புரோட்டீன் RdRp என்ற பாலிமரேஸ் வகையைச் சேர்ந்த புரோட்டீனும் ஒன்று ஆகும். இதன் செயல்பாடுகளை வைத்து, இது வைரஸ்கள் நகலெடுக்கும் செயல்பாட்டை விரைவு படுத்தும் செயலில் பங்கேற்கிறது என்றும், ரெம்டேசிவிர் இந்த புரோட்டேன் செயல்பாடுகளையே தடுக்கிறது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நகலெடுக்கும் புரோட்டீன் செயல்படும் இடத்திற்கு செல்லும் ரெம்டேசிவிர், அந்த புரோட்டீன் இணைய வேண்டிய இடத்தில் அதற்கு பதிலாக, பிரிக்க இயலாத பிணைப்புகளை உருவாக்கி இணைந்துக் கொள்வதால் நகலெடுக்கும் புரோட்டீன் செயல்பட முடியாமல் தடுக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
ஒரு வகை பூச்சியினத்தில் இருந்து பிரிக்கப்பட்ட செல்களில் ஆய்வுகளை மேற்கொண்ட ஆல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரெம்டேசிவிர் சிகிச்சையை மேற்கொண்டு நகலெடுக்கும் செயல்பாடு தடுக்கப்படுவதை நிரூபித்துள்ளனர். மேலும், சீன அறிவியல் அகாடமியின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள், SARS-CoV-2 நகலெடுக்கும் புரோட்டீன் கட்டமைப்பை உயர்-தெளிவுத்திறனுடன் படமாக்கியுள்ளனர். வைரஸின் மரபணுவான RNA மனித செல்களினுள் நுழைதல், நகலெடுக்கும் செயல்பாட்டு தொடக்கம், ரெம்டேசிவிர் இணைப்பு, நகலெடுக்கும் செயல்பாடு தடைபடுதல் என அனைத்து செயல்பாடுகளையும் இந்த அமைப்பு காட்டுகிறது. சீன ஆராய்ச்சியாளர்களும் பூச்சி செல்களைப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.