சந்தோஷமா அடிக்குமாடி குடியிருப்புகளில் வாழ்ந்துக்கிட்டு இருக்கும் மக்களிடம் பேய் இருக்குனு பொய் சொல்லி, போய் ஓட்டி சம்பாரித்து வருகிறார்கள் சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா, முனிஸ்காந்த், ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பில் செக்ரட்டரியாக இருக்கும் செல்வாவை பேய் இருக்குனு சொல்லி பல லட்சம் ஏமாத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் அவரிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
என்னை ஏமாத்துனத்துக்கு ஒரு வேலை செஞ்சிட்டு போங்க இல்லைனா போலீஸ்ல பிடிச்சு கொடுத்துருவேன்-னு மிரட்டுகிறார் செல்வா. இவருக்கு தொழிலில் போட்டியாக இருக்க மைம் கோபி வாங்க நினைக்கும் ஒரு பள்ளிகூடத்தை தான் வாங்கவேண்டும் என்று அவரை வாங்க விடாமல் பேய் இருக்குனு சொல்லி, விரட்ட சொல்லுகிறார் சுரேஷ் ரவி மற்றும் அவரது கூட்டாளிகளிடம்.
இவர்களும் வேறு வழி இல்லாமல் பள்ளிக்கூடத்திற்குச் சென்று மைம் கோபியை பேய் இருக்கிறது என்று பயம் காட்டி ஓடவிடுகின்றனர். வேலை முடிந்தாக செல்வாவிடம் சொல்ல அவர் பார்க்க வருக்கிறார். அப்பொழுது தான் தெரிகிறது அங்கு உண்மையிலே பேய் இருக்கிறதென்று. அந்த பேயை எப்படி சமாளித்தார்கள்?, பள்ளியை செல்வா வாங்கினாரா இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
சன் ம்யூசிக் ஆங்கர் சுரேஷ் வெள்ளித்திரையில் அடி எடுத்துவைத்து பேய் கதையில் முக்கிய ரோலில் நன்றாக நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு சொல்லவே தேவையில்லை. அவருக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். முனிஸ்காந்த் காமெடிக்கு பஞ்சமே இல்ல பக்காவா பண்ணிருக்காரு.
படத்தில் பாடல்கள் இல்லை. ஆனால் இசையமைப்பாளர் சமீரின் பின்னணி இசையில் காதுகள் கிழிகிறது. படத்தின் பலமாக விஷ்ணுவின் ஒளிப்பதிவை சொல்லலாம்.
இயக்குனர் புவன் நல்லான் வித்யாசமான திரைக்கதையில் காமெடி கலந்த திகில் படத்தைக் கொடுத்துள்ளார்.
மொத்தத்தில் மோ சிரிச்சு என்ஜாய் பண்ணக்கூடிய படம்.