சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதிகளில் களமிறங்குகிறார்.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் நேற்று முன்தினம் (10 ந்தேதி) வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று 2வது பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி,
மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
சென்னை மயிலாப்பூர் தொகுதியில் – நடிகை ஸ்ரீபிரியா,
தி.நகர் தொகுதியில் – பழகருப்பையா போட்டி
ஆலந்தூர் தொகுதி – தொழிலதிபர் சரத்பாபு
வேளச்சேரியில் – ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு களமிறங்குகின்றனர்.