சென்னை:

ர்நாடகாவில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீரை கேட்டால், துணை வேந்தரை அனுப்பி வைக்கிறார்கள் என்றும், தமிழர்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் சீண்டுகிறார்கள் என்று, , அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்தவரை ஆளுநர் நியமனம் செய்திருப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன்  டுவிட் செய்துள்ளார்.

தமிழகத்தில் காவிரி பிரச்சினை பெரும் களேபரத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் துக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பா என்பவரை துணைவேந்தராக கவர்னர் பன்வாரிலால் நியமனம் செய்துள்ளார்.

இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது,

கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?

என்று பதிவிட்டுள்ளார்.