அய்சால்:

சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்த மக்களின் உண்மையான பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மிசோரம் மாநில சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் மக்களுடைய உண்மையான பிரதிநிதிகளாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.

தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் அவர் நேர்மையாக செயல்பட வேண்டும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒரு அரசியல் போட்டியாளர். அவர் எதிரி கிடையாது. சட்டமன்றத்தின் செயல்பாடுகள் கண்ணியமும் நல்லொழுக்கமும் கொண்டதாக இருக்க வேண்டும்.

சண்டைகள் உருவாதை அரசியல் கட்சிகள் அனுமதிக்ககூடாது. தேர்தலுக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினர் அவர் சார்ந்த தொகுதியை வளர்ச்சி அடைய வைக்க வேண்டும்’’ என்றார்.