திமுக தலைமையகமான அண்ணாஅறிவாலயத்தில், திமுக பொருளாளர் மற்றும் பொதுச் செயலா ளர் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி கட்சியினர் பலர் அங்கு வந்து சென்றுகொண்டிருந்தனர்.
இந்த நிலையில், சுமார் 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கூட்டம் திடீரென அங்கு வந்து, தங்களது தொகுதி எம்எல்ஏவை காணவில்லை என்று புகார் கூறியது. இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
விசாரணையில், அண்ணா அறிவாலயத்தில் திரண்டது கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் என்பதும், அவர்கள், தங்களது சோழிங்கநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏவான அரவிந்த் ரமேஷை காணவில்லை என்று புகார் கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உடனடியகா இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்ட நிலையில், , கடந்த 5 மாதமாக தாங்கள் கொரோனா ஊரடங்கால் கஷ்டப்பட்டு வருகிறோம், ஆனால், தொகுதி எம்எல்ஏவோ, எங்களுக்கு எந்தவித உதவியும் செய்யாத நிலையில், ஆறுதல்கூற கூட வரவில்லை என்று குற்றம் சாட்டினர். தங்களது தொகுதி எம்எல்ஏ எங்கு இருக்கிறார் என்று தெரியாததால், அவரை கண்டுபிடித்து தரும்படி புகார் கூற அண்ணா அறிவாலயம் வந்ததாக தெரிவித்தனர்.
பெண்களின் குற்றச்சாட்டுக்கள் திமுக நிர்வாகிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக கூறிய அறிவாலய நிர்வாகிகள், அவர்களை உடனே வெளி யேறும்படி உத்தரவிட்டனர்.
இந்த சம்பவம் திமுக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், “கட்சியில் உள்ள ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சியால், அந்த பெண்கள் புகார் கூறியதாக, எம்எல்ஏ ரமேஷ் மறுப்பு தெரிவித்து உள்ளார்.