கோவை:

டந்த ஒரு வாரமாக கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தை பார்வையிட  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை நீலகிரி செல்கிறார்.

கேரளாவில் தீவிரம் கொண்டுள்ள பருவமழை காரணமாக, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.  கடந்த 2ம் தேதியில் அங்கு பெய்து கனமழை காரணமாக, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

உதகை-மஞ்சூர் சாலை, உதகை – கூடலூர் சாலைகள் உள்பட பல  சாலைகளில் ஏராளமான மரங்கள் சரிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.

வரலாறு காணாத மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. தற்போது அங்கு மழை குறையாத நிலையிலும் மீட்புபணிகள் நடைபெற்று வருகின்றன. வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அமைச்சர் உதயகுமார் அங்கு முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தி நிலையில் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு  மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். அப்போது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவார் என கூறப்படுகிறது.