சென்னை

றைந்த நடிகர் விவேக் குடும்பத்துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் விவேக் மிகவும் புகழ் பெற்றவர் ஆவார்.   இவர் தனது நகைச்சுவையின் இடையே பல சீர்திருத்தக் கருத்துக்களைத் தெரிவித்ததால் இவரைப் பலரும் சின்னக் கலைவாணர் எனப் புகழ்வது வழக்கமாகும்.

இவருக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டுக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி அன்று மரணமடைந்தார்.  அவருடைய மறைவு தமிழ் திரையுலகை மட்டுமின்றி பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  அவருடைய மறைவுக்குப் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவ்வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்துக்குச் சென்று விவேக் மறைவால் வாடும் அவர் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.