சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பெற்றார்.  அவருக்கு மூத்த அமைச்சர் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்தாக சென்னை தலைமைச் செயலகம் வந்தமுதல்வர் ஸ்டாலினுக்கு காவல்துறை மரியாதை வழங்கப்பட்டது. அதை  ஏற்றுக்கொண்ட முதல்வர்  தனக்கான அறைக்கு வந்தார்.அங்கு முதல்வர் இருக்கையில் அமர்ந்தார்.  அவருக்கு மூத்த அமைச்சர்கள் துரைமுருகன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து,  முதலமைச்சர்களுக்கான பணிகளை தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த எளிய நிகழ்வில், ‘முத்துவேல் கருணாநிதி எனும் நான்’ என்று ஸ்டாலின் பதவியேற்க, அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். அதைத்தொடர்ந்து கருணாநிதி, அண்ணா, பெரியார் மற்றும் அன்பழகன் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய ஸ்டாலின் மதியம் 12 மணிக்கு மேல் தலைமைச் செயலகம் வந்தார்.

அவருக்கு  காவல்துறையினர் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை  ஏற்றுக்கொண்ட முதல்வர், தலைமைச்செயலகத்தில் உள்ள முதல்வரின் அறைக்கு வந்து,  தமிழக முதல்வருக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

[youtube-feed feed=1]