கமலஹாசன் வாழ்த்துக்கு மு க ஸ்டாலின் நன்றி

Must read

சென்னை

க்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் வாழ்த்துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.   இதையொட்டி புதிய அரசு அமைக்க உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்குப் பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.  அவ்வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் பிரபல நடிகருமான கமலஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமலஹாசன், “பெருவெற்றி பெற்றுள்ள மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள்.  நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்” என வாழ்த்தி உள்ளார்.

இதற்கு மு க ஸ்டாலின் டிவிட்டரில்,  “அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி! பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும்.” என பதில் அளித்துள்ளார்.

 

More articles

Latest article