சென்னை:
றைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா, அரசியல் நாகரீகம் மிக்கவர் என்று புகழ்ந்துரைத்துள்ளார் எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலின்.
1
ஜெயலலிதா மறைவு குறித்து அவர் தெரிவித்ததாவது:
“அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகிள் இருந்தாலும், மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அவரது துணிச்சலான நடவடிக்கை., ஆளுமையைக் கண்டு வியந்திருக்கிறேன்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வென்று, முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார். அந்த பதவி பிரமாணம நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  அழைப்பு  அந்த நிகழ்ச்சிக்கு சென்று வந்தேன்.
நிகழ்ச்சியின்போது எதிர்க்கட்சித்தலைவரான  எனக்கு உரிய இடம்.  அளிக்கப்படவில்லை. இதை சுட்டிக்காட்டியபோது, அப்போது மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வருத்தம் தெரிவித்தார். அந்த அளவுக்கு  அவரது நாகரீகம்.மக்கவர் அவர்.
அவருக்கு ஆழந்த அஞ்சலிகள். அவரை இழந்துவாடும் லட்சோப லட்ச அ.தி.மு.க. தொண்டர்களுக்கு எனது வேதனையை தெரியப்படுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.