சென்னை: மு.க.ஸ்டாலின் – சுப்ரமணியன் சுவாமி திடீர் சந்திப்பு

Must read

சென்னை:

சென்னையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் சந்தித்து பேசினர்.

பிரபல காது மூக்கு தொண்டை டாக்டகர் மோகன காமேஷ்வரன் மகன் திருமண நிகழ்ச்சி இன்று சென்னையில் நடக்கிறது.

சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இருவரும் எதிர்பாராதவிதமாக ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர். பின்னர் இருவரும் இருக்கையில் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் துர்கா ஸ்டாலினும், சந்திரலேகாவும் இருந்தனர்.

2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்ட பின் அந்த வழக்கை தொடர்ந்த சுப்ரமணியன் சுவாமியுடன் ஸ்டாலின் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article