சென்னை

ன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.  வழக்கமாகப் புத்தகமாக வெளியிடப்படும் நிதிநிலை அறிக்கை இந்த முறை டிஜிட்டல் வடிவில் அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக் காகிதத்துக்குப் பதில் டிஜிட்டலில் நிதி நிலை அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு க ஸ்டாலின், ”தமிழக திட்டங்களுக்கான ஆக்கப்பூர்வமான நிதி ஒதுக்கீடு ஏதும் மத்திய பட்ஜெடில் இல்லை.  மேலும் அறிக்கையின் அறிவிப்புக்களும் தெளிவாக இல்லை.  வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், விவசாயிகள், ஏழை எளிய மக்கள் போன்ற யாருக்கும் இந்த பட்ஜெட் எவ்வித பலனும் அளிக்கவில்லை.

தண்ணீர் தாகத்தால் தவிக்கும் பசுமாட்டுக்குக் கானல் நீரைக் காட்டுவது போல் இந்த பட்ஜெட் உள்ளது.  இந்த பட்ஜெட் மூலம் மத்திய அரசு மொத்தத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழக மக்களுக்கு மாய லாலிபாப் கொடுத்து ஏமாற்றி உள்ளது.” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.