மேட்டூர்:
லப்பு திருமணம் செய்யும் பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்கின்றனர் என, அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஒருவர் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.\
கலப்பு திருமணம், கவுரவ கொலைகள்  தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்து வருகிறது. வறட்டு கவுரவமும் சாதிய வெறியும் இதற்கு துணை போகின்றன.
பெரும்பாலான கலப்பு திருமணங்கள் கவுரவ கொலைகளியே முடிகிறது. இதற்கு அவர்களின் பெற்றோர்களும் துணைபோவதுதான் வேதனையான விசயம்.
அதுபோல ஒரு நிகழ்வுதான் தற்போது நடைபெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள  முரளி ஊராட்சி சித்தாகவுண்டனூரைச் சேர்ந்தவர் நகலடி பெரியசாமி என்வரது மகள் 19 வயதான நவீனா. கல்லூரி மாணவி.  இவருக்கும் படித்து வரும்  கல்லூரிப் பேருந்தின் ஓட்டுனர் வெள்ளையம்பாளையம் பெரியண்ணன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல்  கடந்த ஜூலை 11ம் தேதி மேட்டூர் சார்-பதிவாளர்  அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
தான் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது குறித்து நவீனா கூறியதாவது:
marriage
நான் கலப்புத் திருமணம் செய்து கொண்டேன். அதையடுத்து, தொட்டிபாளையத்தில் உள்ள எனது கணவரின் சகோதரி வீட்டில் வசித்து வந்தோம்.
இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த என்னை எனது உறவினர்கள் கடத்திச் சென்றனர். ஈரோடு திண்டலில் உள்ள திருமண தகவல் மையத்தில் விட்டனர்.  முன்னதாக, எனது வயிற்றில் வளரும் கருவை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கலைத்னது விட்டனர்.
அங்கு துளசிமணி என்பவரும், அவரது கூட்டாளிகளும் என்னை அடித்து துன்புறுத்தி, எங்கள் இனத்திலேயே ஒருவரை திருமணம் செய்து கொள்ள அச்சுறுத்தினர்.
என்னைப் போலவே ஏழு பெண்களை அங்கு அடைத்து வைத்திருந்தனர்.
கடந்த  ஞாயிற்றுக்கிழமை எங்களுக்கு காவலாக இருந்தவர்களை ஓர் அறையில் வைத்துப் பூட்டிவிட்டு,  5 பேர் அங்கிருந்து தப்பி வந்து விட்டோம்.  இருவர் அங்கேயே மாட்டிக் கொண்டனர்.  அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை என்றார்.
இதுகுறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  கூறியதாவது:
நவீனாவை மீட்க ஆள்கொணர்வு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தோம். இந்த மாதம் 3-ஆம் தேதி மனு விசாரணைக்கு வந்தபோது, அங்குள்ள காவல் ஆய்வாளர் நவீனாவுக்கு 15 நாள்களுக்கு வர முடியாதபடி காய்ச்சல் உள்ளதாக போலியான சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
நீதிமன்றத்தில் பொய்யான தகவல் தந்த காவல் ஆய்வாளர் மீதும், மருத்துவச் சான்று அளித்த மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, நவீனாவை சித்ரவதை செய்தவர்களையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.