ண்டன்

ண்டனில் நடக்கும் ஆஷஸ் டெஸ்டில் ஸ்டீவன் ஸ்மித்தை கிண்டல் செய்தவர்கள் உண்மையான ரசிகர்களே கிடையாது என மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தற்போது லண்டனில் நடைபெறும் ஆஷஸ் போட்டியின் 2  ஆம் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய  வீரரும் முன்னாள் தலைவருமான ஸ்டீவன் ஸ்மித விளையாடும் போது ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து அவரது கழுத்தில் பட்டு அவர் கீழே விழுந்தார்.  அதனால் மைதானத்தை விட்டு வெளியேறிய அவர் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் விளையாடத் தொடங்கினார்.   அதன் பிறகு 97 ரன்களில் ஆட்டம் இழந்த ஸ்மித் வெளியேறினார்.

இந்த பந்து அடியால் ஸ்டீவன் ஸ்மித கடும் பாதிப்பு அடைந்ததாகத் தெரிய வந்துள்ளது.   அவர் இறுதி நாள் போட்டியில் கலந்துக் கொள்ள மாட்டார் எனவும் அவருக்கு பதில் மார்னல் லபுஸ்சேன் அணியில் விளையாடினார்.  ஸ்டீவன் ஸ்மித் தற்போது  ஓய்வு எடுத்து வருகிறார்.   அவர் தாம்  அடுத்த டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளதாகத் தெரிவித்த  போதிலும் உடல்நிலை காரணமாக விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.

ஸ்டீவன் ஸ்மித் பந்து தாக்கி வெளியேறிய போது சில இங்கிலாந்து ரசிகர்கள் கேலிக் குரல் எழுப்பிக் கிண்டல் செய்தனர்.   இதற்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன், ”இங்கிலாந்து ரசிகர்களின் இத்தகைய செயல்படு மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது.   நான் அனைத்து ரசிகர்களையும் குறை கூறவில்லை. நேற்று கிண்டல் செய்து குரல் எழுப்பிய ரசிகர்களை மட்டுமே குறை கூறுகிறேன்.

இந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தொடங்கிய போது அல்லது இடையில் அவரை தமாஷுக்கு கிண்டல் செய்யலாம். அதில் தவறில்லை.   ஆனால் ஸ்டீவன் ஸ்மித் பந்து அடிபட்டு வலியுடன் மைதானத்தை விட்டு வெளியேறும் போது கிண்டல் செய்வதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  இவ்வாறு கிண்டல் செய்பவர்கள் என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட் ரசிகர்களே கிடையாது எனக் கூறி உள்ளார்..