சென்னை: அரசு சின்னங்கள் தவறாக பயன்படுத்துதல் தொடர்பாக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம்  காவல்துறையை கண்டித்துள்ளது.

தேசிய கொடி, அரசு துறைகள் பயன்படுத்தும் மரபு சின்னங்கள். மேலங்கி, ஜனாதிபதி அல்லது கவர்னர் அலுவலக முத்திரை, மகாத்மா காந்தி, பிரதமர் மற்றும் அசோக சக்கரத்தின் படங்கள், மத்திய, மாநில அரசு அரசு சின்னங்கள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் உள்ளன.  அதன்படி அரசு சின்னங்கள் மற்றும் தலைவர்களின் படங்களை தவறாக சட்ட விரோதமாக பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 2019ம் ஆண்டு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.  அதனப்டி,  அரசு சின்னங்கள் மற்றும் தலைவர்களின் படங்களை தொடர்ந்து தவறாக பயன்படுத்துபவர்களுக்கு ஜெயில் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,   கடந்த 2014ம் ஆண்டு சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா என்பவர் மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு தேசிய சின்னங்கள் மற்றும் அடையாளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அதைத் தடுப்ப தற்கான சட்டவிதிகளை காவல்துறை பின்பற்றுவதில்லை வழக்கு  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த  வழங்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த சட்டவிதி மீறுல்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறை கவனம் செலுத்தவில்லை எனத் தெரிவித்ததுடன், வழக்கில் தமிழக டிஜிபி-யை 5வது எதிர் மனுதாரராகச் உத்தரவிட்டது. மேலும்,  இந்த விதிகளை முறையாக அமல்படுத்துவது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலக அல்லது டிஜிபி அலுவலக உயர் அதிகாரியிடமிருந்து விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைபடித்து பார்த்த நீதிபதி, மத்திய, மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயன்படுத்தபட்டதாக ஒரு வழக்கு கூட பதிவானதாக அறிக்கையில் இல்லையே என்று வியப்பு தெரிவித்ததுடன், குற்றம் நடப்பதை காவல்துறையினர் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது மிகவும் ஆபத்தானது என்று சாடினார்.

மேலும், காவல்துறையினரின் நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்றம்  அதை வேடிக்கை பார்க்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், அரசு, நீதித்துறை, காவல்துறை, வங்கி ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தங்கள் வாகனங்களில் அரசு சின்னங்களை பயன்படுத்தினால், அவர்கள்மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.