கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வந்த வங்கதேச எம்.பி., அன்வருல் அசீம் கடந்த வாரம் திடீரென மாயமான நிலையில், அவரது  உடல்  சடலமாக மீட்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேச எம்.பி., எம்.பி அன்வருல் அசீம் அனார், கடந்த 11ந்தேதி மருத்துவ சிகிச்சைக்காக வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநில தலைவர் கொல்கத்தா   வந்திருந்தார். ஆனால், 14ம் தேதிக்கு பிறகு, அன்வருல் அசீமை தொடர்பு கொள்ள இயலாக நிலையில், செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவர் திடீரென மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேற்வங்க போலீசார் அசீமை தேடி வந்தனர்,.

இந்த நிலையில், கொல்கத்தா  நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசீம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கோல்கட்டாவில் நியூ டவுனில் உள்ள சஞ்சீவா கார்டனின் அடுக்குமாடி குடியிருப்பி அன்வருல் அசீம்  உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் கடந்த மே 14ம் தேதி காணாமல் போனார். 8 நாட்களுக்குப் பிறகு, இன்று (மே 22)  அவரது உடல் மீட்கப்பட்டது. வங்கதேச எம்.பி., அன்வருல் அசீம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படத்திஉள்ளனர். இதற்கிடையில்,  ந்தேகத்தின் அடிப்படையில் வங்கதேச தலைநகர் தாக்காவில் ஒருவரை பிடித்து அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.