சென்னை:

விஎம் வாக்குகளுக்கும், விவிபாட் ஒப்புகை சீட்டு பதிவுக்கும் இடையே வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாடு முழுவதும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழகத்திலும் நாளை காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்படுகிறது. இந்த முறை வாக்கு எண்ணிக்கை, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  ஒரு சட்டப்பேரவை தொகுதியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகளுடன், ஒப்புகை சீட்டும் எண்ணப்படும் என  அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஈவிஎம் மற்றும் விவிபாட் பதிவுகள் இடையே  முரண்பாடுகள் ஏற்படும் மையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னையை சேர்ந்த லக்‌ஷ்மிகிருபா என்பவர் சார்பில் வழக்கறிஞர் ஸ்வரூப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த மனுமீதான விசாரணை  நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்க வந்தது. வழக்கின் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறி முறையீட்டை ஏற்க மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.