மிர்சாப்பூர் : மது வாங்க வருவோரை மலர் தூவி வரவேற்கும் கடைக்காரர்

Must read

மிர்சாப்பூர், உத்தரப்பிரதேசம்

த்தரப்பிரதேசம் மிர்சாப்பூர் நகரில் ஒரு மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களைக் கடைக்காரர் மலர் தூவி வரவேற்றுள்ளார்.

கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதையொட்டி நாடெங்கும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் ’குடிமகன்கள்’ மிகவும் ஏங்கிப் போய் இருந்தனர்.

தற்போது இரண்டாம் முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு விதிகளில் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இது குடிமகன்கள் வயிற்றில் பீர் வார்த்தது போல் சாரி, பால் வார்த்தது போல் ஆகி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மிர்சாப்பூர் நகரில்  ஒரு மதுக்கடைக்காரர் மது வாங்க வரும் வாடிக்கையாளர்களை மலர் தூவி வரவேற்றுள்ளார்.

இந்த காட்சி வீடியோ படமாக்கப்பட்டு வைரலாகி வருகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=QIUKa7cO7bU]

More articles

Latest article