இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’. இதில் சசிகுமாருக்கு ஜோடியாக டப்மாஸ் மிருணாளினி நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சரண்யா, சமுத்திரக்கனி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார். துரைராஜ் கலையை நிர்மாணிக்கிறார்.

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நேற்று தொடங்கியது.