மதுரை: வடமாநிலத்தவர்கள் பிரச்சினை தொடர்பான வீடியோ பதிவிட்டு வதந்தி பரப்பியதான தொடர்பாக தமிழ்நாடு அரசு, உ.பி. மாநில பாஜக வழக்கறிஞர் பிரசாந்த் உம்ரா மீதான வழக்கில், அவரது ஜாமின் மனுமீதான விசாரண முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போல் சமூக வலைதளங்களில் போலி வீடியோ வெளியிட்ட உ.பி.. பாஜக நிர்வாகி மீது தமிழ்நாடு அரசு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பான புகாரில், உம்ராவுக்கு ஏற்கனவே டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், தமிழ்நாடு சென்று ஜாமின் பெற அறிவுறுத்தியது.
இதையடுத்து உம்ரா சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி, பிரசாந்த் உம்ராவின் ஒரு டிவிட்டால் அனைத்து ரயில் நிலையங்களும் நிரம்பி வழிந்தன. ஒரு பெட்டியில் ஆயிரம் தொழிலாளர்கள் பயணம் செய்யக் கூடிய சூழல் உருவானதை நானே நேரில் பார்த்தேன் என்றவர், இதுபோன்ற வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்தது ஏன்? என கேள்வி எழுப்பியவர், பிரசாந்த் உம்ராவ் ஒரு வழக்கறிஞர் என்றால் இதன் தீவிர தன்மை தெரியுமா? தெரியாதா? அவருக்கு சமூக பொறுப்பில்லையதா எனசரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில், பா.ஜ.க. நிர்வாகிக்கு முன்ஜாமின் தர அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , வழக்கின் விசாரணை தீர்ப்புக்காக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.