சென்னை:  மாணாக்கர்கள் 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே அவர்கள் பொதுத்தேர்வு எழுத  ஹால் டிக்கெட் வழங்கப்படும் வகையில், பொதுத்தேர்வு அனுமதியில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பிளஸ்2 பொதுத்தேர்தலை, அதாவது முதல்நாள் தமிழ்த்தேர்வை 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுதாமல் புறக்கணித்துள்ள செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்வியாளர்களுக்கும், சமுக ஆர்வலர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பொதுத்தேர்வு எழுதுவதில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ள தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே  பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்று விதிமுறை உள்ள நிலையில், அதை மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் , அரசுப்பள்ளி மாணவர்கள் 38,000 பேரும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8,500 பேரும், தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேரும் முதல்நாள் தேர்வை எழுதவில்லை என்றவர் தேர்வு எழுதாதவர்களை தேர்வு எழுத வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது என்றார். மேலும்,  தேர்வு நாளன்றே தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் தேர்வுக்கு வராததற்கு காரணம் என்ன என்பது குறித்தும் விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும்,  சில மாணவர்கள் பள்ளிகளுக்கு குறைந்த நாட்களே வந்திருந்தாலும், அவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களை தேர்வு எழுத வைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கிறோம் என்று தெரிவித்தவர்,  குறைந்தபட்ச வருகை பதிவேடு விதி இந்த நிலையில் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், 50 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதவில்லை என்பது அதிர்ச்சியாக இருந்தாலும், அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்ற முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது.

பள்ளிகளில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற விதிகள் இருந்தாலும் கூட, இரண்டு நாள், மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்திருந்தால் கூட தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறார்கள், இனியும் அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த தகவல் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அறிவிப்பு  மாணவர்கள் மத்தியில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ஏற்கனவே கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக கல்விநிலையங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் கல்வி போதிக்கப்பட்டால், மாணாக்கர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டு, மாணாக்கர்கள் தறுதலைகளாக மாறி உள்ள நிலையில், அமைச்சரின் இந்த செயல் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.