ஆண் குழந்தைக்கு தந்தையான மிர்ச்சி சிவா…!

Must read

12பி படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் நடிகர் சிவா . ஆனால் அதிகஅளவில் பேசப்படவில்லை.

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படம் இவருக்கு சிறந்த படமாக அமைந்தது. தற்போது சுமோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தனது நீண்ட நாள் காதலியான பேட்மிண்டன் வீராங்கனையான ப்ரியா என்பவரை கடந்த 2012ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ப்ரியா அஜித்தின் நெருங்கிய உறவினர் என்பதால் இவர்களது திருமணத்திற்கு அஜித் தனது குடும்பத்தோடு வந்திருந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் சிவா மற்றும் ப்ரியா தம்பதியினருக்கு அப்போலோ மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு அகஸ்தியா என்று பெயரிட்டுள்ளனர்.

More articles

Latest article