ஆற்காடு:
விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மூவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியிருக்கிறார் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்.

மவேலூர் மாவட்டத்தில் உள்ள குண்டலேரி கூட்டுரோடு அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒரு பெண் உட்பட மூவர் இரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்குப்போராடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விபத்தில் சிக்கிய மூவரையும் தனது பாதுகாப்பு வாகனம் மூலம் திமிரியயில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார்
பிறகு மூவரையும் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அடுத்து திமிரி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று போலிசாரிடம் தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கசெய்தார்.
[youtube-feed feed=1]