டில்லி

ரு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் அசாமில் மாவட்ட காவல்துறை சுப்பிரண்ட் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஐ பி எஸ் ஆக 2012 ஆம் வருடம் தேர்வு செய்யப்பட்டவர் கவுரவ் உபாத்யாய்.  இவர் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதம் ஒரு 13 வயது சிறுமியை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த குற்றச்சாட்டு 2020 ஆம் வருடம் ஜனவரி 3 ஆம் தேதி பதியப்பட்டது.

கவுரவ் உபாத்யாய் வீட்டில் நடந்த ஒரு பார்ட்டியில் இந்த சம்பவம் நடந்ததாகப் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தாய் ஜனவரி 3 ஆம் தேதி புகார் அளித்தார்.  சிறுமியின் தாய் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஆவார்.   இந்த புகார் பிறகு அசாம் சிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த புகாரை அசாம் சி ஐ டி பிரிவினர் விசாரணை நடத்தின.ர்  இதையொட்டி அவருக்கு எதிராக 2020 ஆம் வருடம் மார்ச் 31 ஆம் தேதி வழக்குப் பதியப்பட்டது;   அதில் அவர் மீது பலாத்கார குற்றம் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது.   இந்த வழக்கு அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்ட சிறப்பு போக்சோ சட்ட நீதிமன்ற விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் தற்போது அசாம் மாநிலத்தில் பாஜக அரசு அமைத்துள்ளது.  அதையொட்டி இந்த மாதம் பல அதிகாரிகள் ஒட்டு மொத்தமாக பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களில் கவுரவ் உபாத்யாய் ஒருவர் ஆவார்.  இவர் மாவட்ட காவல்துறை சூப்பிரண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அசாம் மாநில காவல்துறைத் தலைவர் பாஸ்கர் ஜோதி மகந்தா, “இந்த வழக்கு ஏற்கனவே பதியப்பட்டு விசாரணையில் உள்ளது.  நீதிமன்றம் முடிவின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.   நீதிமன்றம் உத்தரவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படுவார்.  நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை அவரது பணியை நாங்கள் பயன்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.