சென்னை:
அமைச்சர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடந்த 5 ஆண்டுகளில் சேகர் ரெட்டி ரூ. 300 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம் அவரது டைரி மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த டிசம்பரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சுமார் ரூ.34 கோடிக்கு புதிய 2000 ரூபாய் நோட் டுகள், ரூ. 147 கோடிக்கு பழைய நோட்டுகள் மற்றும் 178 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.
இதை தொடர்ந்து சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகளை சி.பி.ஐ. கைது செய்தது. அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிபிஐ, அமலாக்கத்துறை வழ க்குகளில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதி இருந்தது. அதில், சேகர் ரெட்டியிடம் இருந்து தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்த மூத்த அமைச்சர்களின் பெயர், ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள், மூத்த அரசு அதிகாரிகள், பல மூத்த அமைச்சர்களின் செயலாளர்கள், எதிர்க்கட்சி மற்றும் பல்வேறு கட்சிகளின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
2016ம் ஆண்டு தேர்தலின் போது அரசியல் கட்சிகள், தலைவர்களுக்கு சேகர் ரெட்டி பணம் கொடுத்ததுகுறித்து அவரது டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தகவல்களை வருமான வரித்துறை சேகரித்து தலைமை செயலாளரிடம் கொடுத்துள்ளது.
கிரிஜா வைத்தியநாதனுக்கு கொடுத்த டைரியில் சுமார் 40க்கும் மேற்பட்டவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இவர்களுக்கு ரூ. 300 கோடிக்கும் மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மணல் குவாரிகள் மற்றும் பண பரிவர்த்தனை குறித்த தகவல்களை முறையாக டைரியில் ரெட்டி குறித்து வைத்துள்ளார்.
இதுகுறித்து ரெட்டி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கூறுகையில், ‘‘தனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை. துணை முதல்வர் என்ற முறையில் பன்னீர் செல்வத்தை தெரியும். அவருடன் எ ந்த வர்த்தக தொடர்பும் இல்லை’’ என்றார்.
ஆனால், அவரது டைரியில் இருந்த பெயர் பட்டியல் சமூக வலை தளங்களில் வைரலாகியது. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.