நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதை அடுத்து தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவை என மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது ஒன்றே இலக்கு என்ற செயல்திட்டத்துடன் திமுக செயல்பட்டு வருகிறது.
இதற்காக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க குழுக்களை அமைத்துள்ளதுடன், அமைச்சர்களுக்கு அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ள அறிவுரைகள் :
- மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், தொகுதியில் இருக்கும் கட்சியின் சாதக – பாதக அம்சங்கள் குறித்து, தேர்தல் குழுவிடம் ஆலோசிக்க வேண்டும்.
- அமைச்சர்களின் மாவட்டம் – பொறுப்பு மாவட்டத்தின் வெற்றித் தோல்விக்கும் அமைச்சர்களே பொறுப்பேற்க வேண்டும்
- கூட்டணியை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அறுவடை செய்ய வேண்டும்.
- தீர்க்க முடியாத பிரச்சினையை திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.
- தொகுதியில் வெற்றியை நழுவவிட்டால், அமைச்சர் பொறுப்பே நழுவி விடும்.
என்று திமுக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.