சென்னை,
அமைச்சர்கள் கட்சி குறித்து பேச அதிகாரமில்லை, இன்று தினகரனை சந்தித்த திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் கூறி உள்ளார்.
டிடிவி தினகரனுக்கு இதுவரை 30 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
அதிமுக அம்மா அணியில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமாரி டிடிவி தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்களை ஒதுக்கி வைப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து அதிமுக அம்மா அணியும் இரண்டாக உடைந்தது. அதிமுக தற்போது 3 அணியாக உள்ளது.
கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக இருக்கும் என்னை ஒதுங்க சொல்ல யாரும் அதிகார மில்லை என்றும், அமைச்சர்கள் ஏதோ பயத்தில் பேசுகிறார்கள் என்றும் தினகரன் கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஆரம்பத்தில் சென்னை பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேல் மற்றும், தேனி எம்எல்ஏ தங்கத்தமிழ்செல்வன் போன்ற ஒருசிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் நேற்று இரவு வரை 27 எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை திருப்பரங்குன்றம் போஸ் மற்றும், உசிலம்படி நீதிபதி சந்திப்பு,, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் ஆகியோர் சந்தித்து பேசினார்.
இதன் காரணமாக தினகரனுக்கு ஆதரவாக இதுவரை 30 எம்எல்ஏக்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து உசிலம்படி எம்எல்ஏ போஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவே இருக்கிறார் என்றும், துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன்தான் இருக்கிறார் என்று கூறினார்.
மேலும், டிடிவி தினகரனை ஒதுங்கி இருக்க சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும், அதற்கான அதிகாரம் படைத்தவர் பொதுச்செயலாளர் மட்டுமே என்று கூறினார்.
தற்போது அதிமுக அம்மா அணியை துணைப்பொதுச்செயலாளர் தான் நடத்தி வருகிறார் என்றும் அமைச்சர்களுக்கு கட்சியை பற்றி பேச அதிகாரம் இல்லை, அவர்கள் தங்களது துறைகளை பற்றி மட்டுமே சொல்ல வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக காரர்தான், ஆகவே ஆட்சி 4 ஆண்டு நீடிக்கும் என்றும் கூறினார்.
மேலும், ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் விரைவில் தங்களது அணிக்கு வருவார்கள், அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் போஸ் கூறினார்.