பெங்களூர்,

பெரா வழக்கு காரணமாக நாளை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதி மன்றத்தில் சுதாகரனை ஆஜர் படுத்த கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அவரை சிறையில் இருந்து அனுப்ப முடியாது என்று கர்நாடக சிறைத்துறை தெரிவித்து உள்ளது.

அந்நியக செலாவணி வழக்கு சென்னை  எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 22ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, டி.டி.வி.தினகரன் ஆஜரானார். சுதாகரன் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்ததால் ஆஜராகவில்லை.

அதையடுத்து நடைபெற்ற விசாரணையின்போது, தினகரன் திகார் ஜெயிலில் இருந்தாலும், சுதாகரன் பெங்களூர் சிறையில் இருந்தாலும், பாஸ்கரன் மட்டுமே ஆஜரானார்.

இதையடுத்து ஜூன் 8ந்தேதி நடைபெறும் விசாரணையின்போது தினகரன், சுதாகரன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நாளை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய, சுதாகரனை போலீசார் காவலில் எடுத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  சுதாகரன் வரமாட்டார், அவர் வருகை ரத்து செய்யப்பட்டதாக கர்நாடக சிறைத்துறை டிஐஜி கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது,

பாதுகாப்பு காரணங்களுக்காக சுதகரனை தமிழகம் அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. கர்நாடகாவில் பேரவை கூட்டத்தொடர் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருவதல் சுதகரனுக்கு பாதுகாப்பு தர போதிய காவலர்கள் இல்லை என்றும்,

மேலும் தமிழக காவல் துறை யும் பாதுகாப்பு தர மறுத்துவிட்டனர் என கர்நாடக சிறைத்துறை, டி.ஐ.ஜி. சத்ய நாராயனன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பெராக வழக்கில்  நாளை சுதாகரன் ஆஜராக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.