கிரானைட் முறைகேடு: பிஆர்பி மீது 4,553 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதுரை,

கிரானைட் முறைகேடு வழக்கில் பிஆர்பி கிரானைட்ஸ் நிறுவனர்  பி.ஆர்.பழனிசாமிக்கு மேலூர் கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை அருகே அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து, கிரானைட் வெட்டிஎடுத்து முறை கேடு செய்யப்பட்ட வழக்கில்  பி.ஆர்.பழனிசாமி உட்பட 67 பேர்மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இது சம்பந்தப்பட 3 வழக்கில் 4,553 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை அரசு வழக்கறிஞரால் மேலூர் நீதிமன்றத்தில்  இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மேலூர், கீழவளவு பகுதிகளில் அரசு நிலங்களில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் அரசுக்கு 1089.17 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பழனிசாமி உட்பட 67 பேர் மீது ஏற்கனவே  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கு மதுரை அருகே உள்ள மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று விசாரணைக்க வந்த இந்த 3 வழக்கில்ம பி.ஆர்.பழனிசாமி உட்பட 67 பேர் மீது 4,553 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை அரசு வழக்கறிஞர் இன்று தாக்கல் செய்தார்.
English Summary
Granite case: 4,553-page charge sheet against PRP in Melur court